Description

லுட்சேர்ன் இராஜா இராஜேஸ்வரி அம்மன் ஆலயம்

புலம்பெயர்ந்த மக்களின் மற்றும் புலம் பெயர் நாட்டில் பிறக்கும் எம் எதிர்காலச்சந்ததியின் சமய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணிப் பாதுகாத்தல். ஆன்மீக ஈடேற்றத்தை அளிப்பதும் முதுமையில் மட்டுமன்றி இளமையின் தனிமையை போக்கி மனதுக்கு அமைதியையும் அருளையும் பெற்றுத் தருவதும் அடுத்து வரும் சந்ததியினர் எமது மொழி கலை கலாச்சார சமயங்களில் வெளிப்படுத்த உதவுவது ஆலயமே. இந்த நாட்டில் முதல் தலைமுறை தமிழர்களாகிய நாம் விரும்பியோ விரும்பாமலோ அடுத்துவரும் சந்ததிக்கு இந்நாட்டிலேயே விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதோடு எதிர்கால சந்ததியினர் எமது சமய கலாச்சார பண்பாட்டு நெறிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க ஆவன செய்தல். தாயகத்திலே இலங்கையிலே அனர்த்தங்களாலும், வன்செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உதவுதல் மற்றும் குழந்தைகளுக்காக கல்வியினை வழங்குவதற்கான உதவிகளை வழங்குவது.
புலம்பெயர் நாடுகளில் அதாவது இங்கு வாழும் குழந்தைகளுக்காக இந்து சமய/ சைவ சமய அறநெறிப் பாடசாலைகளை ஏற்பாடு செய்து அவர்களுக்கு எங்களுடைய சமய சம்பந்தமான விளக்கங்களை கொடுப்பது மற்றும் பயிற்சிப் பட்டறைகள் அமைத்து அவர்களுக்கு விளக்கம் கொடுப்பது. ஏனைய நாட்டு மக்களுக்கு அதாவது ஏனைய சமய, கலை, கலாச்சார, மொழி மக்களுக்கு எங்களுடைய இந்து சமய புனிதங்களை எடுத்துக் கூறுவது.

முகவரி: Emmenweidstrasse 58b, 6020 Emmenbrücke
தொடர்புகள்: +41 78 748 28 79
இணையதளம்: www.rajeswaryamman.com

இந்த ஆலயம் வழிபாட்டுக்காக மட்டுமல்லாமல், சமூக பணிகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளையும் நடத்துகிறது. குடும்பங்களும் குழந்தைகளும் வந்துதேவையான ஆன்மீக மற்றும் கலாச்சார அனுபவத்தை பெறலாம்.

Lucerne Raja Rajeswary Amman Temple

Address: Emmenweidstrasse 58b, 6020 Emmenbrücke
Contact: +41 78 748 28 79
Website:  https://www.rajeswaryamman.com/

The temple is not only a place for prayer but also organizes social service activities and cultural programs. Families and children can experience a rich blend of spiritual and cultural traditions here.

Photos

Add Review & Rate

Be the first to review “Lucerne Raja Rajeswary Amman Temple  ”

Quality
Location
Service
Price