Description
Sentamil Solai for Computer Classes.
இதுவரை காலமும் Basel-Stadt, “Bläsi Schulhaus” பாடசாலையில் மாத்திரம் நடைபெற்றுவந்த எமது “செந்தமிழ் சோலை” தமிழ்ப்பாடசாலை எதிர்வரும் புதன்கிழமை தொடக்கம் Baselland, Allschwill மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வசதிகருதி Allschwil Lettenweg பாடசாலையிலும் நடைபெறவுள்ளது என்பதனை மிகவும் மனமகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
மேலதிக தொடர்புகளுக்கு:
பத்மா தர்மராஜா
079 385 12 82
பவானி தவராஜா
079 629 40 93
தாயகத்திலிருந்து பிரத்தியேகமாக வருகை தந்திருந்த இளைப்பாறிய கிழக்கு மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளரும் மற்றும் விரிவுரையாளருமான திருமதி பரமேஷ்வரி இளங்கோ அவர்களினால் இன்று எமது
“செந்தமிழ்ச்சோலை” தமிழ்ப்பாடசாலை ஆசிரியைகளுக்காக எமது காரியாலயத்தில் நடாத்தப்பட்ட விசேட பயிற்றுவிப்புப்பயிற்சியின் நிறைவாக எமது ஆசிரியைகள் சிலருடன் எடுக்கப்பட்ட நிழற்படம்.
எதுவித சிரமங்களினையும் பாராது பலமணி நேரங்கள் சிரித்த முகத்துடன் தனக்கேயுரிய பாணியில் பல முன்னுதாரணங்களுடன் பயிற்றுவித்து அனைவரினதும் நன்மதிப்பினைப்பெற்ற திருமதி இளங்கோ அவர்களுக்கு எமது சிரம்தாழ்ந்த பணிவான மனமார்ந்த நன்றிகள்