Description

கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்என்பது தமிழர்களின் வேதவாக்கு. இதற்கமைய, 1991ம் ஆண்டில் Emmenbrücke கிராமத்தில் இருந்த குடிபெயர்ந்த மக்களின் முகாமில் நவராத்திரி விழாவின் போது துர்க்கை அம்மனின் நிழல்வடிவத் திருவுருவம் வைத்து வழிபாட்டை ஆரம்பித்தனர். சுவிற்சலாந்தில் குடியேறிய தமிழர்களின் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து பக்தர்களின் தொகையும் உயர்ந்தது. இதனையடுத்து லுட்சேர்ன் நகரில் St.Garli கத்தோலிக்க தேவாலயத்தின் அருகில் துர்க்கையம்மன் குடி கொண்டிருக்கும் கோவிலாக இது உயர்ந்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சைவசமய வழிபாடுகளும் ஆன்மீக நற்சிந்தனை, கூட்டுப்பிரார்த்தனை என்பனவும் இங்கு நடைபெற்றது.

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றிஎன்பதற்கமைய, சைவசமயம், இன, மொழி, மத வரையறைகளைக் கடந்து அனைத்து மக்களையும் இணைத்து வழிபடுகின்ற கோவிலாக இது உயர்ந்து நின்றது.

1997ம் ஆண்டு ,கோவில் மக்கள் மயமாக்கப்பட்டு, பொதுநலச் சிந்தனை மிக்க நிர்வாகக் கட்டமைப்பும் உருவாக்கப்பட்டது. ஒவ்வொருவருடைய வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியாகக் கருதும் தமிழினம் சமூகமாக ஒன்றிணைந்து. 2000 ம் ஆண்டில் மத்திய மாநிலங்களில் வாழும் தமிழ் மக்களின் பேராதரவுடன் Root என்னும் கிராமத்தில் ஆன்மீக, ஆகம விதிகளுக்கமைய பரிவாரமூர்த்திகள் பிரதிஷ்டை செய்யபட்டு, மகாகும்பாபிசேகம் நடைபெற்றது. இதையடுத்து பலராலும் அறியப்பட்ட அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயமாக இது முழுவடிவம் பெற்றது. இப்போது நாள்தோறும் நித்திய பூசையும், சிறப்பு பூசைகளும், அலங்காரத் திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன.

Come to our religious institution Arulmiku Thurkkai Amman to find inner peace. Huge beautiful temple.

Would be more nicer if its maintained well. Ladies who collect cash at the car parking area doesn’t give a bit of respect. C’mon it’s a temple and it’s expected

Our Services

  • Parking
  • WiFi

Add Review & Rate

Be the first to review “Arulmiku Thurkkai Amman”

Quality
Location
Service
Price