Description
எம்மைப்பற்றி
உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பதில்லை
ஊடகங்கள் சமூகப் பொறுப்பு வாய்ந்த்தவை. உண்மைகளை எடுத்துக்கூறி சமூக முன்னேற்றத்திற்கு பலம் சேர்க்க வேண்டிய தார்மீக கடமையினைத் தம்மகத்தே கொண்டவை.
சமூகப் பொறுப்புள்ள ஊடகவியலாளர் எவரும் ஊடகத்தினை ஒரு வியாபார நிலையமாகவோ, பொழுதுபோக்கும் களமாகவோ கருதாமல் பணியாற்றுகின்றனர். ஈழமுரசும் அவ்வாறான ஒரு பணியையே ஆற்றுகின்றது.
எமது தாயகத்திலே ஆயுதம் தாங்கிய உன்னதமான விடுதலைப் போராட்டம் ஒன்று நடைபெற்றபோது, அந்த விடுதலையை முன்னோக்கி நகர்த்த வேண்டிய தார்மீக பொறுப்பை உணர்ந்து புலம்பெயர்ந்த மண்ணில் தனது பயணத்தை தொடங்கியது ஈழமுரசு. இன்று சர்வதேச ஒத்துழைப்புடன் அந்த மக்களின் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து போய்விட்டதாக கூறப்படுகின்ற நிலையிலும், ஈழமுரசு தனது விடுதலைக்கான பயணத்தை நிறுத்திக்கொள்ளவில்லை. விடுதலையை வென்றெடுக்கும் வரை அதன் பயணம் தொடரும்.
இன்று ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரியிறைக்கும் ஒரு களமாக தமிழ் ஊடக உலகம் மாற்றப்பட்டிருக்கும் நிலையிலும், நடுநிலமை என்று போலி முகம் காட்டாமல் ‘உண்மையின் முன்னால் நடுநிலமை ஒன்று இருக்க முடியாது.’ என்ற கப்டன் கஜன் அவர்களின் தாரக மந்திரத்தை உள்வாங்கியபடி ஈழமுரசு தனது பயணத்தை தொடர்கின்றது. இதனால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள் அத்தனையையும் கடந்து ஈழமுரசு என்றும் விடுதலையின் பாதையில் பயணிக்கும் என்பதை உறுதிகூறுகின்றோம்.