Description
Janalingeswarar Aalayam
ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில்
Verein SAIVANERIKOODAM
திருச்சிற்றம்பலம் சைவத்தமிழ் அன்பு நெஞ்சங்களுக்கு தில்லைக்கூத்தன், சுவிஸ் நாட்டில் பேர்ன் நகரில் ஞானலிங்கேச்சுரன் என எழுந்த பெருமான் இணையடி தொழுது உளமார்ந்த அன்பு வணக்கங்கள். திருக்குடமுழுக்குக் கண்ட திருக்கோவிற் தோன்றத்தை நாம் உங்களுடன் மீட்டுப்பார்க்கிறோம். எமது தோற்ப் பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றோம். உள்நுழைவதற்கு முன் ஒரு நாளிகை எமது எண்ணப்பகிர்வு: அனைத்தும் இறைவன் செயல் என்று முழுமையாக ஏற்றுக்கொண்டு, திருவருள்வழிகாட்ட சைவநெறிக்கூடமாகிய நாம் எமது பயணத்தைத் தொடர்ந்து இன்று அருள்ஞானமிகு ஞானிங்கேச்சுரர் திருக்கோவில் குடமுழுக்கு திருவருளாட்கூட நயந்து, வியந்து, மனம் கிழ்ந்து நிறைகிறோம். இப்பெரும் பணியில் பல ஆயிரம் உள்ளங்களின் பங்களிப்பு பொருளாகவும், தொண்டாகவும், நல்லாசியாகவும், நிறைந்துள்ளது. மனிதப்பிறவி வாய்க்கப்பெற்று, நிறைந்த திருத்தொண்டல் நாமும் பங்கெடுக்க வழிசெய்த பரம்பொருளிற்கும், வழிகாட்டிய சித்தர், ஞானயிர், யோகியர், குருமார்களுக்கும், திருத்தொண்டர்களுக்கும் எண்ணிறந்த அளவு எமது நன்றிகள். எழுத்தில் சொற்களில் வார்த்தைகளில் அனைத்து உணர்வுகளையும் முழுமையாகக் கடத்த முடியுமா? சிலர் ஆமோதிக்கலாம், சிலர் மறுக்கலாம். எம்மாலான முயற்சியினை நேற்று, இன்று, நாளை எனும் காலப்பருவத்தில் இப்படைப்பில் உள்ளடக்க முயன்றுள்ளோம். பல தடவைகள் குறிப்பிட்டதுபோல, திருவருளும், தேடலும், ஆர்வமும், முயற்சியும் எம்மை செயலாற்றத் தூண்டின, இந்நூலைப் படைக்கத் தூண்டின. அனைத்து வளங்களும் எமக்கு வரையறுக்கப்பட்டதாக இருக்கும் நிலையில், மனித முயற்சில் முழுமையான வலுவை அளித்து முயன்றுள்ளோம். இருப்பினும் எமது தொண்டினையும் வளத்தினையும் துறைசார் தொழில் அமைப்புக்ளுடனோ அல்லது மரபுமுறையில் காலந்தொட்டு இயங்குகின்ற பொது மன்றங்களுடனோஒப்பிடமுடியாது.
Janalingeswarar Aalayam
1994ல் ஒரு அறையில் மன்றம், 2007 திருக்கோவில் புது இடத்தில், 2010 திருவிழாக் காணும் திருக்கோவில், 2015 சுவிஸ் தலைநகரில் திருக்கோபுரத்துடன் நிலையான திருக்கோவில், திருத்தொணடர்சபை, சிவஞானசித்தர்பீடம், சிவபணிநிலையம், தமிழ்வழிபாட்டுப்பயிற்சிக்கூடும், சைவநெறிக்கூடும் ஐக்கியராச்சியம் என்று எமது மன்றத்தின் பணிகள் விரைவடைந்து வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றபோதும், மேலும் பல்வளங்கள் எம் தொண்டடுகள் சிறக்கத் தேவையாகவே உள்ளன. எமது சீர்திருத்தத்தை ஏற்று கொள்கைப்பற்றுடன் பயணிக்கும் திருத்தொண்டர்கள் திருவருளின் கூட்டு முயற்சியினை நினைவாக்கி உள்ளார்கள். ஆற்ப்படும் தொண்டுகளுக்கு நாம் மாற்றீடாக அளிக்க எம்மிடம் எதுவுமில்லை. அனைவருக்கும் கூலி எம் பெருங்குருநாதன் பெரியண்ணா சொன் திருமொழி, So அவன் பெருமான் அளிப்பதே திருக்கூலி என்பதாகும். இதுவே உண்மையும்கூட. எம் மன எண்ணத்தால் மட்டும் எம்மால் பெருமானிற்கு கோவில் கட்டியிருக்க முடியாது. தன்னருளாற் தனக்கு தான் கோவில்கொண்டான் பெருமான் என்பதே உண்மை. ஆனால் எம் மனித முயற்சி இரட்டிப்பு மடங்காக இருக்கவேண்டும் என்று எம் திருத்தொண்டர்கள் உழைத்ததும் அத்தளவு உண்மையாகும். So பெயர்கள் குறிப்பிட்டு நாம் நன்றிகளை நவிலமுடியாது, ஊன் உறக்கம் இன்றி உழைக்கும் உள்ளங்கள் இங்கு நிறை உண்டு. வீடு, வேலை, கோவில் என்று வாழும் வாழும் உள்ளங்கள் நிறை உண்டு. இவர்கள் இணையடியினை இவ்வேளை நாம் தொழுது நவில்கிறோம் நன்றி.
Janalingeswarar Aalayam
ஞானலிங்கப்பெருமான் அருள்வான் இவர்களுக்கு திருக்கூலி என்ற எமது குருநாதர் சொல்லை நிறுத்திப் பணிகிறோம் எம் தலை. எம்மிற் தமிழ்ப்புலவர்களோ, சைவசித்தாந்தப்புலவர்களோ எவரும் இல்லை. நாம் தமிழைத் தேடியே கற்கிறோம். தமிழைத் தேடியே எழுதுகிறோம். பழந்தமிழ் இன்று எமக்குப் புரிவது கடினமாக உள்ளது. புலம் பெயர்ந்த எமது தமிழ் இனத்தில் எமது தமிழ் எம் குழுந்தைகளுக்கு கடினமாகத் தெரிகிறது, ஆகவே நாளை என்ற கேள்வி எழும்போது, தமிழ் இலக்கணத்துடன் கடுந்தமிழாக, கற்றோரிடம் கற்ற கல்வியாக மட்டும் இருந்தால் அது எம் இளந்தமிழ்ச் சமூகத்திற்கு பயனளிக்காது. அதுபோலக் கடினம் என்று நாம் எம் மொழியைத் தேடிக்கற்பதை வாழ்வதை குறைத்தால், So அதுகும் எம் தலைமுறைக்குப் பயன் அளிக்காது. இதன் காரணமாகவே நாம் இயன்றளவு எம் திருக்கோவிற் படைப்புக்களை தமிழ்ப் படுத்த முயல்கிறோம். எமது வெளியீடுகளிலும், படைப்புக்ளிலும் தவறுகள் இருக்கலாம், திருத்திக்கொள்வது தேவையானதாகும்.
சில வழக்குச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதிலும் கடினம் உள்ளது. இருப்பினும் முயல்கிறோம். நாம் எம் இனத்தில் எவருடனும் போட்டியிடவும் இல்லை. எவரையும் வெல்ல விரும்பவுமில்லை. ஆனால் உரிமையுடன் அனைவரையும் திருக்குடமுழுக்குத் திருநாளில் தமிழில் வழிபட தமிழ்ப்பட உளமார அழைக்கின்றோம். கோவிற் கோபுரம் பேர்ன் தலைநகர் விண்ணைத் தொட்டு நிற்கிறது, நால்வர்பெருமக்கள் விண்குடத்தின் முன் வீற்றிருக்கும் வேழமுகத்தோனிற்கும், ஞானாம்பிகைக்கும், ஞானலிங்கப்பெருமானிற்கும், ஞானலிங்கபாலன் ஞானவடிவேலனிற்கும் செந்தமிழில் திருமறைகள் பாடிய வண்ணம் உள்ளனர். and also வாருங்கள் தமிழில் வழிபடுவோம், தமிழ் வழிப்படுவோம்.