Description
எமது அனுபவப் பகிர்வு
காப்புறுதியானது வாழ்தலின் போதும் வாழ்வின் பின்னரும் தமக்கும் தம் சந்ததியினருக்கும் எப்போதும் காப்பரணாக செயற்பட வேண்டிய தென்பது கட்டாயமானதாகும். இதனை சொல்லளவில் மட்டும் வைத்துக் கொண்டு செயலளவில் வெறுமையாக நடாத்தி மக்களை ஏமாற்றும் பல காப்புறுதி நிறுவனங்களின் நேரடி அனுபவங்களை நாம் பெற்றிருந்தோம். அந்த கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடுகளே எம்மை ஓர் பிராகாசமான பாதையில் தடம் பதிக்க வைத்ததென்பது முற்றிலும் உண்மையாகும். சேகரித்த இவ் அனுபங்களைக் கொண்டு 2000 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது காப்புறுதி நிறுவனமான டுகைந ஊழளெரடவiபெ ஆரம்பப்பயணாளிகளாக 59 பேருடன் உருவாக்கப்பட்டு இன்று வரை (2008) 2300 பயனாளிகளை உள்ளடக்கியுள்ளமை எம்மேல் தொண்டசீரான சேவைக்கும் நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றியாகும். இதற்கு உறுதுணையாக நின்று எம்மை செம்மையாக வழி நடாத்தியவர்களையும் இந்த நிலைக்கு உயர்திய வாடிக்கையாளர்களையும் இத் தருணத்தில் நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.
இணை நிறுவனங்களும் எதிர்கால நடவடிக்கைகளும்
எமது வாடிக்கையாளர்கள் பெறும் பயன்களையும் அவர்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையையும் அடித்தளமாகக் கொண்டு உலகளாவிய ரீதியாக நன்மதிப்பை பெற்ற 07 க்கும் மேற்பட்ட முன்னோடி காப்புறுதி நிறுவனங்கள் எம்மை இணைத்து செயற்படுகின்றது தென்ற நல்ல செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம் மேலும். எதிர் காலத்தில் இன்னும் பல நம்பிக்கையான காப்புறுதி நிறுவனங்களுடன் இணைந்து கொள்ள நாம் திட்டமிட்டடிருப்பதோடு பயனாளிகளுக்கான பல வெகுமதி திட்டங்களும் சலுகைகளும் வழங்கி பயனடைய வழி செய்யவுள்ளோம். இது சார்பான தகவல்கள் அவ்வப்போது எமது இணையத்தளம் வாயிலாக வெளிவரும்.
நிருவாக கட்டமைப்பு
சுவிஸ் நாட்டிலோ அல்லது வேறெங்கிருந்துமோ கிளை நிறுவனங்களைக் கொண்டிராத எமது Life Consulting காப்புறுதி நிறுவனம் இரு நிருவாக இயக்குனர்களையும் 11 பணியாளர்களையும் கொண்டு இயங்கி வருகிறது.
- நிருவாகம்
- நிருவாக இயக்குனர்கள்
- இணைக்காப்புறுதி நிறுவனங்கள்
- நிறுவன பணியாளர்கள்
E-Mail
rathakrishnan@life-consulting.info
karan@life-consulting.info