Description

நோக்கம்:
முனைப்பு  இலங்கையின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்ட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சமுக ஆர்வலர்களால்  2010.02.07 அன்று ஆரம்பிக்கப்பட்டதே முனைப்பு நிறுவனமாகும்

அங்கத்துவம்:
சுவிஸ் நாட்டில் வாழும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தமக்கள் இதில் அங்கத்துவம் வகிக்கின்றனர்

நிதிபெறும்வழிகள்:
அங்கத்துவ சந்தா, சுவிஸ் மக்களின் அன்பளிப்பு, கதம்பமாலை நிகழ்வின் மூலம் பெறப்படும் நிதி.

கதம்பமாலை:
இங்கு வாழும் நமது பிரதேச மக்களை ஒன்றினைத்து வருடாந்தம் நடாத்தப்படும் நிகழ்வாகும் இதில் நம்மவர்களின் நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் , இந்நிகழ்வுக்கு இந்நாட்டில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் ஆதரவு வழங்குகின்றனர். இதன் மூலம் பெறப்படும் நிதி நம்மவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த பெரும் உதவியாக உள்ளது.

தற்போதையசெயற்திட்டங்கள்:

  • பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்த புலமைப்பரிசில் நிதி வழங்குதல்.
  • பெற்றோரை இழந்து உறவினர்களுடன் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக மாதாந்த நிதி உதவி வழங்கல்.
  • மாதம் ஒரு விதவைக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்
  • அங்கவினர்களை சமுகத்துடன் இணைக்கும் நோக்குடன் சுய தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • அவசர மருத்துவ உதவிக்கு நிதி வழங்கல்.
  • அனர்த்ததின் போது உதவுதல்.

இதுவே எமது நிரந்தர வேலைத் திட்டங்களாகும். இவ்வேலைத் திட்டங்கள் அனைத்தும் தற்போது கிழக்கு மாணத்திலேயே நடைமுறைப் படுத்தப்படுகின்றது.

Add Review & Rate

Be the first to review “Munaippu”

Quality
Location
Service
Price